வெள்ளி, 15 ஜனவரி, 2010

நான் கடவுள்

என் கண்கள் வழியே நான் பார்த்த‌ உலகத்தை என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.இவை என் கருத்துக்களே யன்றி பிறர் மீது திணிப்பது எனது நோக்கமில்லை. எனது சிந்தனைகள் பிறரது சிந்தனையை தூண்டிவிட்டு அவர்களும் உண்மையை கண்டு பிடிக்க உதவலாம். எனது உண்மையும் உண்மையில் உண்மையில்லாமல் கூட இருக்கலாம்.வேறொரு பரிமாணத்தில் அணுகும் போது உடைந்து போக‌லாம் குறிப்பு: எல்லோரும் பெரும்பாலான பதிவுகளில் என்னைப் பற்றி என்ற‌ இடத்தில் "என்னை பற்றி சொல்லிக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை ". என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் எனக்கு என்னை பற்றி சொல்லி கொள்வதற்கு நிறைய இருக்கிறது. என்றுதான் சொல்வேன். அப்படி எழுதியுள்ள அன்பர்கள் தயவு செய்து மாற்றி கொள்ளுஙகள்.ஏனெனில் உஙகளிடம் சொல்லி க் கொள்ள நிறையவே இருக்கிற்து உண்மையில் சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லாத எனக்கே நிறைய சொல்ல வேண்டும் என்றிருக்கும் போது இத்தனை படைப்புகளை பிரமாதமாக தந்திருக்கும் உஙகளிடமா இல்லை. இன்னமும் உஙகளிடம் ஒன்றுமில்லை என்று நினைத்தால் தயவு செய்து என்னிடம் வாருங்கள் . நான் கண்டு பிடித்து தருகிறேன். உஙகள் திறமையை..எல்லோரிடமும் ஒரு திறமை எங்கோ ஒளிந்து கொண்டு தானிருக்கிறது.

நான் கடவுள் என்றால் என்னால் எல்லாமே முடியுமா? நான் எப்போது கடவுளாகிறேன்?எப்படி ஆகிறேன்? அதற்கு பொருளென்ன ? அதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம். கடல் இருக்கிறது. அதன் நீரை ஒரு கையில் அள்ளிப் பாருஙகள்.அந்த கடல் நீருக்கும் கை நீருக்கும் என்ன வித்தியாசம் . அடிப்படையில் ஒன்றுமே இல்லை இரண்டிலும் ஒரே கூறுகள் தானே உள்ளன.

ஒரு துளி நீரிலும் அது தானே இருக்கிறது . ஆனால் அந்த துளியால் அப்படி என்ன செய்து விட முடியும். ஆனால் கடலின் வீச்சு சுனாமியின் போது எப்படி இருந்தது ?

அது போல் தான் நாமும் கடவுளின் குழந்தைகள் தான் நாம் க்டவுளின் குணமனைத்தும் நமக்கும் உள்ளன.” praise the lord “என்று சொல்வார்கள். திருவிளையாடல் படத்தில் கூட ந்ற்ற‌மிழால் எம்மை பாடுக என்று சிவன் கேட்பது போல் ஒரு காட்சி வரும்.தேவாரத்தையும் ,திருவாசகத்தையும் பிரபந்தத்தையும் பாட வைத்து இறைவன் ரசிப்பதுண்டு.அத்னால் தானோ நாமும் நம்மை பற்றி பிறர் புகழ வேண்டும் என்று எப்போதும் எண்ணுகிறோமோ என்னவோ? தயவு செய்து யாரும் தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். எனது கருத்தை மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

கடவுளின் ஒரு துளியாகிய நாம் அந்த‌ கட‌லில் சென்று சேரும் வரை { ஜீவன் முக்தி நிலை கிடைக்கும் வரை குடத்தின் காற்றானது ஆகாயத்தில் கலக்கும் வரை} அந்த கடவுளைத் தான் நாம் வேறு வடிவில் தேடிக்கொண்டிருக்கிறோம்.

பணம், புகழ், பெயர் என்று வெவ்வேறு வடிவத்தில் எதையாவது செய்து கொண்டிருக்கிறோம். என்னை பொறுத்தவரை நாத்திகர்கள் என்றும் ஆத்திகர்கள் என்று இரு பிரிவுகள் இல்லை
என்றே கூறுவேன். இருவருக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை

ஏனெனில் நாத்திகன் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் ஒருவர் கூட தன்னை விட வயதில் மூத்த்வர் அல்லது தனது மதிப்பிற்குரிய ஒருவர் தன் வீட்டிற்கு வரும் போதோ அல்லது தான் அவரது வீட்டிற்கு செல்லும் போதோ கையை எடுத்து நமஸ்கரிப்பதோ அல்லது கால்களில் விழுவதோ கூட பழக்கமாயிருக்கிறது.

நம்மை விட சிறிதளவே வயதிலோ அல்லது பதவியிலோ அல்லது குணத்திலோ பெரியவரை காணும் போது இப்படி நடந்து கொள்கிறோம் என்றால் இப்பிரபஞச‌த்தையே படைத்த அந்த கடவுளை வணஙகுவது எப்படி குற்றமாகும்.அது மட்டுமல்ல. அவர்கள் தஙகளுக்கு மீறிய சக்தி ஒன்று இருப்பதை நிச்சயமாக நம்புகிறார்கள்.

அதை இயற்கை என்றோ அல்லது வேறு ஏதோ வென்று கூட சொல்லிகொள்ளட்டுமே. அதைதான் நாம் கடவுள் என்று சொல்லிக் கொள்கிறோம். எனவே அந்த சகோதரர்களும் கூட ஆத்திகர்கள் தான். அவர்களும் கூட எதையோ நம்புபவர்கள் தான்.


"உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம் இறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே."

13 கருத்துகள்:

  1. நல்ல கட்டுரை,இரத்தின சுருக்கமாக சொல்லியிருக்கின்றீர்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. எனது கட்டுரையை படித்த முதல் நண்பர் நீங்கள்.
    அப்படியென்றால் மேற்கொண்டு நானும் பித்தனாக‌
    எழுதலாம்
    நன்றி
    இனியன் பாலாஜி

    பதிலளிநீக்கு
  3. யதார்த்தாமாக இருக்கிறது, தொடர்ந்து எழுதுங்களேன்.

    பதிலளிநீக்கு
  4. யதார்த்தாமாக இருக்கிறது, தொடர்ந்து எழுதுங்களேன்.

    நல்ல பதிவு
    தொடர்க

    பதிலளிநீக்கு
  5. தொடங்கியாச்சா. தொடக்கமே மிக அருமை.
    மிக தெளீவாக எழுதியிருக்கீங்க எல்லாம் வல்ல இறைவனின் துணை என்றென்றும் இருக்கட்டும்.

    தொடார்ந்து எழுதுங்கள்..

    சொல் சரிபார்பை நீக்கிவிடுங்கள். அப்போதுதான் ஈசியாகயிருக்கும் கருத்துக்கள் தெரிவிப்போர்களுக்கு..

    அன்புடன் மலிக்கா

    பதிலளிநீக்கு
  6. நன்றி பிரபு ஜி, பரோட்டா ஜி, தோழி மலிக்காஜி.
    பதிவை எழுதிவிட்டு திடீரென்று காணாமல் போய்விட்டேன்.
    மற்ற பதிவுகளை படித்து ரசித்துக் கொண்டிருந்தேன்.ஒரு நாள் திடீரென்று பார்த்தால்
    உங்களது பின்னூட்டங்களை பார்த்து ஆடிப் போய் விட்டேன்
    இன்னும் கூட எனக்கு சரியாக த்தெரியவில்லை என்பதுதான் உண்மை.
    கண் கவரும் வண்ணப் படங்களை பதிவிடத் தெரியவில்லை.
    அதனால்தான் அப்படியே விட்டு விட்டேன். அது தவிர உங்களுடைய பதிவுகளைப்
    படித்து விட்டு பேசாமல் பின்னூட்டம் மாத்திரம் எழுதலாம் என்றே தோன்றுகிறது. .
    சென்னையில் இருக்கும் உங்களது நண்பர்கள் பதிவர்கள் யாராவது நேரில் விளக்க‌
    மளித்தால் கூட நன்றாக இருக்கும், அப்படி யாராவது தெரியுமா நண்பர்களே.

    எனக்குஅறிமுகப்படுத்த முடியுமா? அல்லது இப்படியே விட்டுவிடலாமா?
    யோசனை சொல்லுங்களேன்
    உங்களை நண்பர்களாகத் தந்த எல்லாம் வல்ல எனது இறைவனுக்கு
    நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு நீங்களும் உங்கள் குடும்பமும்
    எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றேன்
    நன்றி
    இனியன் பாலாஜி

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ஐயா! நான் கமல். ஒஸ்ரேலியாவிலிருந்து. நான் சென்னையில் இருந்தால் தாங்கள் தரும் பழைய பாடல்களைப் பதிவேற்றம் செய்யலாம். ஆனால் நான் மிக மிகத் தொலைவில் இருப்பதால் தங்களைச் சந்திக்க வரமுடியாது. தங்களது விருப்பப்படி என்னுடைய வலைத் தளத்தில் பழையபாடல்களையும் பதிவேற்றவுள்ளேன். தங்களைப் போன்ற பெரியவரின் பேராதரவிற்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடமும் பணிவு உள்ளது என்பதையும் ஆத்மாத்தமான கருத்துக்களையும் தங்களது கட்டுரை மூலம் சொல்லிச் சென்றுள்ளீர்கள். நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  10. தொடர்ந்தும் நீங்கள் இவ்வாறான பதிவுகளை எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. இது பெரிய விசயமே இல்லை ஜீ. நீங்க பதிவுகளை ரெடிசெய்துவிட்டு தற்போது எப்படி பதிவிட்டீர்களோ அதேபோன்று பதிவிடும்போது.
    இமேஜ் என்று அதிலிருக்கும் அதற்குமுன் பதுவுக்கு தகுந்ததுபோல் கூகிளில் ஒருபடம் எடுத்து கணினியில் சேமித்துக்கொள்ளுங்கள் அந்த இமேஜை கிளிக் செய்து நீங்க சேமித்துவைத்த இடத்திலிருந்து எடுத்துக்கொள்ளவும் படம் குறிப்பு எழுதும் பகுதிக்கு வந்ததும். எழுதிவைத்திருக்கும் குறிப்பை
    அதன் கீழ் காப்பி பேஸ் செய்து பப்ளிஸ் கொடுத்தால் போதும். பதிவு ரெடி.

    நாளை மீதி.

    நேரம்கிடைக்கும்போது பார்வையிடவும்.
    http://fmalikka.blogspot.com/2010/04/9.html

    http://niroodai.blogspot.com

    பதிலளிநீக்கு
  12. நன்றி தோழி மலிக்காஜி
    நான் தங்களது நீரோடையையும். கலைச்சாரலையும்
    பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.
    நான் கூட முதன் முதலில் எனது தலைப்பை நீரோடை என்றுதான் கொடுத்திருந்தேன் காரணம்
    சிறுவயதில் 30 வருடங்களுக்கு முன்பு நீரோடை , மற்றும் கண்கள் என்று இரு கையெழுத்து பிரதிகள்
    ந்ண்பர்களுடன் சேர்ந்து எழுதி இருந்தேன்.
    தற்செயலாக தங்களுடைய தலைப்பை பார்க்க நேர்ந்ததும் எனது நீரோடையை நீக்கி விட்டேன்.
    எனவே நீங்கள் எழுதுவது நான் எழுதுவதாக எண்ணி மகிழ்ச்சி யடைகிறேன்.
    இனியன் பாலாஜி

    பதிலளிநீக்கு
  13. //கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை வீணடிக்காமல் நானும் பக்தி எனும் ஆன்மிகக் கடலில் குதித்து பிறரையும் அதில் தள்ளி விடுவது..//
    ஆர்கிமிடீஸ் தண்ணீல குதிச்சாரு அவர் எடைக்கு தண்ணி வெளில வந்துச்சு(யூரேகா!). நீங்க ஆன்மீக கடலில் குதித்தபோது என்ன வெளில வந்துச்சு? எவ்வளவு வந்துச்சு? ஞானா

    பதிலளிநீக்கு